search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    3000 குழந்தைகள் உயிரை காப்பாற்றிய பிரபல பாடகி.. குவியும் பாராட்டுக்கள்..!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    3000 குழந்தைகள் உயிரை காப்பாற்றிய பிரபல பாடகி.. குவியும் பாராட்டுக்கள்..!

    • பாலக் முச்சலும் அவரது சகோதரரும் இணைந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான விருப்பங்களை பெற்றுள்ளது.

    பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல், 'சேவிங் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற நிதி திரட்டும் அமைப்பின் மூலம் இதய நோய்களுடன் போராடும் 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

    இதுதொடர்பாக 32 வயதான பாலக் முச்சல் கூறும்போது, இசைக்கச்சேரி மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து இந்த நல்ல காரியத்தை செய்து வருகிறேன். இன்னும் 413 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தற்போது இதுதான் எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியம் என பாலக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் தெருக்களில் பாடி நன்கொடைகளை சேகரித்து கார்கில் வீரர்களுக்காக நிதி திரட்டிய தனது முதல் அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.

    சமீபத்தில், இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த அலோக் என்ற சிறுவனின் வீடியோவைப் பகிர்ந்து, ஆதரவு அளித்தவர்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றது.

    பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல் இதயக் கோளாறினால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் பொருட்டு அவர் மற்றும் அவரது சகோதரர் பாலாஷ் முச்சால் ஆகிய இருவரும் இணைந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி இதய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றி வரும் பாலக் முச்சல் சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக கின்னஸ் உலக சாதனை மற்றும் லிம்கா சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளார். அவரது பணியை மத்திய அரசு மற்றும் பிற பொது நிறுவனங்கள் பல்வேறு விருதுகளை வழங்கி அங்கீகரித்துள்ளன.

    "ஏக் தா டைகர்" (2012), "ஆஷிக் 2" (2013)," கிக் (2014), "ஆக்சன் ஜாக்சன்" (2014) "மெய்மறந்தேன் பாராயோ" (2015) "எம். எஸ். தோனி" (2016) மற்றும் காபில் (2017) போன்ற படங்களில் பாலக் முச்சல் பணியாற்றியுள்ளார்.

    பாலக் முச்சலின் பயணம் இரக்கத்தின் சக்திக்கு ஒரு சான்றாகும், மேலும் தனிநபர்கள் தங்கள் திறமைகளை மற்றவர்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தும்போது அவர்கள் ஏற்படுத்தும் ஆழமான தாக்கம். தன் இடைவிடாத முயற்சியின் மூலம், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், மற்றவர்களை இந்த உன்னதமான காரியத்தில் சேர ஊக்குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×