search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாலஸ்தீனம் தனி நாடுதான்: ரஃபா மீதான தாக்குதல் வருத்தமளிக்கிறது - இந்திய வெளியுறவுத்துறை
    X

    'பாலஸ்தீனம் தனி நாடுதான்': ரஃபா மீதான தாக்குதல் வருத்தமளிக்கிறது - இந்திய வெளியுறவுத்துறை

    • ரஃபா நகரில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ரஃபா மீது தாக்குதல் நடத்த தடைவிதித்துள்ளது.

    ரஃபா நகரில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 50 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இந்த தாக்குதல் துரதிருஷ்டவசமான தவறு. இஸ்ரேல் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது எனத் தெரிவித்திருந்தார்.

    காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்திடவும், ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக்கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தேவை என அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

    ரஃபாவில் உள்ள முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "இஸ்ரேல் ஹாமாஸ் தாக்குதலில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும் இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்தது வருகிறது.இது ஒரு சோகமான சம்பவம் என்று இஸ்ரேலிய தரப்பு ஏற்கனவே பொறுப்பேற்று, சம்பவம் குறித்து விசாரணையை அறிவித்துள்ளது என்பதையும் நாங்கள் கவனிக்கிறோம்.

    அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 1980 ஆம் ஆண்டே பாலஸ்தீனத்தை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×