search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 3-வது நாள்- லைவ் அப்டேட்ஸ்
    X

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 3-வது நாள்- லைவ் அப்டேட்ஸ்

    • பாராளுமன்றம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது
    • இரண்டு நாட்கள் கடும் அமளியால் அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 25-ந்தேதி) தொடங்கியது. முதல் நாள் கூட்டத் தொடர் மற்றும் 2-வது நாளான நேற்றைய கூட்டத்தொடர் எதிர்க்கட்சி அமளியால் நாள்முழுவதும் ஒத்திவைப்பட்டது.

    Live Updates

    • 28 Nov 2024 12:20 PM IST

      பாராளுமன்ற மக்களவை மதியம் 12 மணிக்கு மீண்டும் தொடங்கியது. அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில ஈடுபட்டனர். இதனால் அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

    • 28 Nov 2024 11:28 AM IST

      மாநிலங்களவையும் மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • 28 Nov 2024 11:26 AM IST

      புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்றதும், வழக்கமான அவை நடைமுறைகள் தொடங்கிய நிலையில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

    • 28 Nov 2024 11:11 AM IST

      மகாராஷ்டிரா மாநிலம் நந்தட் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ரவிந்த்ர சவான் எம்.பி.யாக பதவி ஏற்றார்.

    • 28 Nov 2024 11:09 AM IST

      பாராளுமன்ற எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவி ஏற்றார்.  அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியவாறு உறுதிமொழி ஏற்றார்.

    • 28 Nov 2024 11:07 AM IST

      பிரியங்கா காந்தி எம்.பி.யாக பதவி ஏற்க இருக்கும் நிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக நடனம்

    • 28 Nov 2024 11:07 AM IST

      பிரியங்கா காந்தி மக்களவை உறுப்பினராக பதவி ஏற்க இருக்கும் நிலையில் காங்கிரஸ் தொண்டர்களின் உற்சாகம்

    • 28 Nov 2024 11:06 AM IST

      தாய் சோனியா காந்தியுடன் பாராளுமன்றம் வருகை தந்த பிரியங்கா காந்தி

    • 28 Nov 2024 11:05 AM IST

      பிரியங்கா காந்தி பதவி ஏற்க இருக்கும் நிலையில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ராகுல் காந்தி

    Next Story
    ×