search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்றம் குளிர்கால கூட்டத் தொடர் 2-வது நாள்... லைவ் அப்டேட்ஸ்
    X

    பாராளுமன்றம் குளிர்கால கூட்டத் தொடர் 2-வது நாள்... லைவ் அப்டேட்ஸ்

    • அவை நடவடிக்கையை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ்.
    • அதானி விவகாரம் தொடர்பாக கூட்டு பாராளுமன்ற குழுவை அமைக்கக்கோரி நோ

    இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் (25-11-2024) தொடங்கியது.

    Live Updates

    • 27 Nov 2024 12:15 PM IST

      12 மணிக்கு மீண்டும் அவை தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

    • 27 Nov 2024 12:03 PM IST

      மாநிலங்களவை மீண்டும் கூடியதும் அதானி லஞ்சம் குற்றச்சாட்டு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

      இன்றைய அவை செயல்களை நிறுத்தி வைத்துவிட்டு இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என 18 உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கினர். இதை மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் நிராகரித்தார். இதனைத் தொடரந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    • 27 Nov 2024 11:25 AM IST

      நாம் இன்று அரசியலமைப்பு தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது நிர்வாகம் வாக்குச்சாவடிகளை (booth) கைப்பற்றும் வேலையை செய்கிறது. நம்முடைய நாடு அரசியலமைப்பின்படி இயங்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உடன் சம்பல் மாவட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதனால் அரசு மற்றும் பா.ஜ.க.-வின் கொள்கை, நோக்கம் குறித்து மிகப்பெரிய கேள்வி எழும்பியுள்ளதாக நினைக்கிறேன் என அகிலேஷ் யாதவ் மனைவியும், மக்களவை எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • 27 Nov 2024 11:18 AM IST

      மாநிலங்களவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு.

    • 27 Nov 2024 11:17 AM IST

      அதானி குரூப் முறைகேடாக நடந்துள்ளது குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.

    • 27 Nov 2024 11:15 AM IST

      அவை தொடங்குவதற்கு முன் காங்கிரஸ் மக்களவை எம்.பி. மாணிக்கம் தாகூர், "மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மவுனம் காப்பது ஒருமைப்பாடு, உலகாளிய நிலை குறித்து கவலை அளிக்கிறது. அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.

    • 27 Nov 2024 11:13 AM IST

      அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு

    Next Story
    ×