search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திருத்தச் சட்டத்துக்கு தடை: பாட்னா ஐகோர்ட் அதிரடி
    X

    இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திருத்தச் சட்டத்துக்கு தடை: பாட்னா ஐகோர்ட் அதிரடி

    • பீகாரில் இட ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
    • பாட்னா ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    பாட்னா:

    இந்தியாவிலேயே முதல் முறையாக பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்ட பிறகு சட்டசபையில் பேசிய முதல் மந்திரி நிதிஷ் குமார், பீகாரில் அமலில் இருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

    முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இட ஒதுக்கீடு உயர்வுக்கான மசோதா அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கிடையே, அரசு வேலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உயர்வு தொடர்பான வழக்கு பாட்னா ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

    இந்நிலையில், அரசு வேலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை உயர்த்தும் பீகார் அரசின் அறிவிப்பை பாட்னா ஐகோர்ட் இன்று ரத்துசெய்து உத்தரவிட்டது.

    அப்போது, சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், அரசமைப்பின் அதிகார வரம்பு மற்றும் சமத்துவத்தை மீறுவதாக தலைமை நீதிபதி கே வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. பாட்னா ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    Next Story
    ×