search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுதந்திர தின உரையில் சாதனை படைத்த பிரதமர் மோடி
    X

    சுதந்திர தின உரையில் சாதனை படைத்த பிரதமர் மோடி

    • இந்திய வரலாற்றில் எந்த பிரதமரின் சுதந்திர தின உரையை ஒப்பிட்டாலும், இதுதான் மிக நீண்ட உரை.
    • கடந்த 1947-ம் ஆண்டு நேரு 72 நிமிடங்களும், 1997-ம் ஆண்டு குஜ்ரால் 71 நிமிடங்களும் உரையாற்றியது நீண்ட நேர உரையாக இருந்தன.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய சுதந்திர தின உரைதான், அவரது சுதந்திர தின உரைகளிலேயே மிக நீளமானது. 98 நிமிட நேரம் அவரது உரை நீடித்தது. இந்திய வரலாற்றில் எந்த பிரதமரின் சுதந்திர தின உரையை ஒப்பிட்டாலும், இதுதான் மிக நீண்ட உரை ஆகும். இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி, கடந்த 2014-ம் ஆண்டு முதல்முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றியபோது, 65 நிமிடம் உரையாற்றினார்.

    2015-ம் ஆண்டு 88 நிமிடங்களும், 2016-ம் ஆண்டு 96 நிமிடங்களும், 2017-ம் ஆண்டு 56 நிமிடங்களும், 2018-ம் ஆண்டு 83 நிமிடங்களும், 2019-ம் ஆண்டு 92 நிமிடங்களும், 2020-ம் ஆண்டு 90 நிமிடங்களும், 2021-ம் ஆண்டு 88 நிமிடங்களும், 2022-ம் ஆண்டு 74 நிமிடங்களும், 2023-ம் ஆண்டு 90 நிமிடங்களும் அவரது சுதந்திர தின உரை நீடித்தது.

    இதற்கு முன்பு, அவரது நீண்ட உரை 2016-ம் ஆண்டு ஆற்றிய உரையாகவும், மிக குறைந்த நேர உரை 2017-ம் ஆண்டு ஆற்றிய உரையாகவும் இருந்தது.

    பிரதமர் மோடிக்கு முன்பு, கடந்த 1947-ம் ஆண்டு நேரு 72 நிமிடங்களும், 1997-ம் ஆண்டு குஜ்ரால் 71 நிமிடங்களும் உரையாற்றியது நீண்ட நேர உரையாக இருந்தன.

    கடந்த 1954-ம் ஆண்டு நேரு 14 நிமிடங்களும், 1966-ம் ஆண்டு இந்திரா காந்தி 14 நிமிடங்களும் பேசியது, குறைந்த நேர சுதந்திர தின உரைகளாக உள்ளன.

    கடந்த 2012-ம் ஆண்டு மன்மோகன்சிங்கின் சுதந்திர தின உரை 32 நிமிடங்களிலும், 2002-ம் ஆண்டு வாஜ்பாயின் சுதந்திர தின உரை 25 நிமிடங்களிலும் முடிவடைந்தன.

    Next Story
    ×