என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு- அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
- அதிகபட்சமாக உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55 ரெயில் நிலையங்கள் மறுசிரமைக்கப்படுகின்றன.
- ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18 ரெயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகின்றன.
நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 470 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன.
இந்த 508 ரெயில் நிலையங்களில் உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55 ரெயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்காளத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, அரியானாவில் 15, கர்நாடகாவில் 13 என 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த மறுசீரமைப்பு பணியானது, நன்கு வடிவமைக்கப்பட்ட போக்குவரத்து சுழற்சியுடன் பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குகிறது. ரெயில் நிலைய கட்டிடங்கள் உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.