என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பெண்களுக்கு பாகுபாடு இல்லாத, வாய்ப்புகள் நிறைந்த சூழலை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை- பிரதமர் மோடி உறுதி
- கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை அரசு உறுதி செய்துள்ளது.
- பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் அவர்களுக்கு சிறகுகளை வழங்கியுள்ளது.
கடந்த மே மாதம் 30 அன்று, மத்திய பாஜக அரசு தனது 8 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தது. இதையொட்டி நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜக நடத்தி வருகிறது.
இந்நிலையில் பெண்களுக்கு பல்வேறு துறைகளில் அதிகாரமளிப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்த விவரங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பெண்களுக்கு மேலும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்குவது குறித்த கட்டுரைகளை நீங்கள் படித்து மகிழ்வீர்கள் என்றும், கடந்த 8 ஆண்டுகளில் இந்த முயற்சிகள் பல்வேறு துறைகளை உள்ளடக்கியது மற்றும் பெண்களுக்கு அதிக கண்ணியம் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்துள்ளது என்றும் தமது டுவிட்டர் பதவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பாகுபாடு இல்லாத வாய்ப்புகள் நிறைந்த சூழலை பெண்களுக்க உருவாக்க தமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், பெரிய சீர்திருத்தங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஏற்பட்ட மாற்றம், புதிய உயரங்களுக்கு பறக்க அவர்களுக்கு சிறகுகளை வழங்கியுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.