என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி
- பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியுள்ளது
- பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடந்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்பதால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17-வது மக்களவையை கலைக்க பரித்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் வெளியானது. பிரதமர் மோடி பதவியேற்பு விழா வரும் 8-ம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்த பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, காபந்து பிரதமராக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.