search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    potato bribe
    X

    உ.பி.யில் லஞ்சமாக '5 கிலோ உருளைக்கிழங்கு' கேட்ட போலீஸ் சஸ்பெண்ட்

    • ராம் கிரிபால் சிங் என்ற சப் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்கும் ஆடியோ இணையத்தில் வைரலானது.
    • "உருளைக்கிழங்கு" என்ற வார்த்தை லஞ்ச பணத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேசத்தில் உருளை கிழங்கை லஞ்சமாக கேட்ட சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

    ராம் கிரிபால் சிங் என்ற சப் இன்ஸ்பெக்டர் ஒரு வழக்கை முடித்து வைப்பதற்கு லஞ்சம் கேட்டதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

    அந்த ஆடியோவில், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் ஒரு விவசாயியிடம் 5 கிலோ "உருளைக்கிழங்கு" கேட்கிறார். அதற்கு விவசாயி என்னால் 2 கிலோ உருளைக்கிழங்கு தான் கொடுக்க முடியும் என்று பதில் சொல்கிறார். கடைசியாக 3 கிலோ உருளை கிழங்கு கொடுப்பதாக இருவரும் டீல் பேசியுள்ளனர்.

    விசாரணையில், "உருளைக்கிழங்கு" என்ற வார்த்தை லஞ்ச பணத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    ஆடியோ வைரலானதை அடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ராம் கிரிபால் சிங் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த கன்னோஜ் எஸ்பி அமித் குமார் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்

    Next Story
    ×