search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2024-ல் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு
    X

    2024-ல் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு

    • கடந்த குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
    • கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.

    2024ம் ஆண்டில் நாட்டின் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் உள்ள ராஜ பாதையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படும். கடந்த முறை சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமைப் பாதையில் (முன்பு ராஜ பாதை) குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

    கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.

    ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது வெளிநாட்டு தலைவரை வரவழைப்பது வழக்கம். அதன்படி கடந்த குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    இந்நிலையில், வரும் 2024ம் ஆண்டின் 75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×