என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
உடனடியாக அமல்படுத்த முடியாவிட்டால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் பயன் என்ன?: பிரியங்கா கேள்வி
- மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்துவதை தாமதப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
- பெண்களை நீங்கள் ஒரு நகைச்சுவையாகவே பார்க்கிறீர்கள்.
போபால்:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்துவதை தாமதப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது. அதை எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் அனைவரும் ஆதரித்தோம். ஆனால் 10 ஆண்டுகளுக்குப்பின்னர்தான் அதாவது மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப்பின்னரே மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த முடியாவிட்டால் இந்த மசோதாவால் பயன் என்ன? பெண்களை நீங்கள் ஒரு நகைச்சுவையாகவே பார்க்கிறீர்கள். இடஒதுக்கீடு எங்கள் உரிமை' என கூறினார்.
பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 84 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்த பிரியங்கா, ஆனால் அரசு பணிகளில் அவர்களது பங்களிப்பு இல்லை என்றும், இது குறித்து கேட்டால் பா.ஜனதாவினர் மவுனமாகி விடுவதாகவும் குற்றம் சாட்டினார்.