search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவது கூட்டணியின் ஒற்றுமையை உடைக்கக்கூடும்: கார்கே
    X

    பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவது கூட்டணியின் ஒற்றுமையை உடைக்கக்கூடும்: கார்கே

    • மாநிலங்களை பொறுத்தவரை ஆம் ஆத்மி, இடது சாரிகள் எதிரிகள்தான்
    • மாநில தேர்தல் முக்கியம் என்பதை கூட்டணி கட்சிகளிடம் எடுத்துரைக்க இருக்கிறோம்

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவது இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை உடைக்கக்கூடும். முதலில் தேர்தலை எதிர்கொண்டு, அதன்பின் கட்சிகள் ஒன்று சேர்ந்து, பிரதமரை தேர்ந்தெடுக்க முடியும். இது பொதுத்தேர்தலுக்கு முன் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செல்ல உறுதியளிக்கும்.

    மாநில தேர்தல் கட்சிகளுக்கு முக்கியமானது என்பது பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட மற்ற தலைவர்களிடம் காங்கிரஸ் கட்சி விளக்கமாக தெரிவிக்க இருக்கிறது. அதனால் இந்தியா கூட்டணி நடவடிக்கையில் சற்று ஒதுங்கி இருக்க இருப்பதையும் விளக்க இருக்கிறோம்.

    பா.ஜனதாவை தோற்கடிக்க கூட்டணி, ஒரு அணியாக ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம். மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சியோடு எந்தவொரு கூட்டணிக்கும் எதிராக உள்ளது.

    அதேபோல்தான் பா.ஜனதாவிற்கு எதிராக இடதுசாரிகள் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம். ஆனால், கேரள மாநிலத்தில் அவர்கள் எதிரிதான். பிரதமர் வேட்பாளராக முன்னிலைப் படுத்துவதில் ராகுல் காந்தி ஆர்வம் காட்டவில்லை. பொதுத்தேர்தலில் முடிந்தவரை ஒற்றுமையாகப் போராட அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×