என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
உம்மன் சாண்டி விருதுக்கு ராகுல்காந்தி தேர்வு
Byமாலை மலர்22 July 2024 7:59 AM IST
- உம்மன் சாண்டி பவுண்டேசன் சார்பில், பொது சேவை விருதுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
- சசிதரூர் எம்.பி. தலைமையிலான குழு, பரிசுக்கு தகுதியானவர்களை பரிசீலித்து தேர்வு செய்தது.
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் மூத்த தலைவா்களில் ஒருவரும், கேரள முன்னாள் முதல் மந்திரியுமான உம்மன் சாண்டி, இறந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி அவரது பெயரில் நிறுவப்பட்டுள்ள உம்மன் சாண்டி பவுண்டேசன் சார்பில், பொது சேவை விருதுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி முதல் ஆண்டுக்கான விருதுக்கு காங்கிரஸ் தலைவர், ராகுல்காந்தியின் பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த பரிசு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், விருதுச் சிற்பமும் கொண்டதாகும். சசிதரூர் எம்.பி. தலைமையிலான குழு, பரிசுக்கு தகுதியானவர்களை பரிசீலித்து தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், ராகுல்காந்தி நடத்திய பாரத ஒற்றுமை யாத்திரை உள்ளிட்ட சேவைகளுக்காக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
Next Story
×