search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேசிய விளையாட்டு தினம்: தற்காப்பு கலை மாணவர்களுடன் பயிற்சி செய்த ராகுல் காந்தி
    X

    தேசிய விளையாட்டு தினம்: தற்காப்பு கலை மாணவர்களுடன் பயிற்சி செய்த ராகுல் காந்தி

    • இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்டு 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • மேஜர் தியான்சந்த் பிறந்தநாளான இன்று அவரை கவுரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்டு 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஹாக்கி விளையாட்டின் மந்திர மனிதன் என அழைக்கப்படும் மேஜர் தியான்சந்த் பிறந்த நாளான இன்று, அவரை கவுரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    நாட்டுக்காக விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, தற்காப்பு கலை பயிலும் மாணவர்களைச் சந்தித்தார். அவர்களுடன் சேர்ந்து பயிற்சி செய்தும், உரையாடி மகிழ்ந்தார்.

    இதுதொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்தோம். எங்கள் முகாம் தளத்தில் தினமும் மாலையில் ஜியு-ஜிட்சு பயிற்சி செய்வதை நாங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தோம்.

    ஆரோக்கியமாக இருப்பதற்கான எளிய வழியாகத் தொடங்கிய இது, நாங்கள் தங்கியிருந்த ஊர்களைச் சேர்ந்த சக யாத்ரிகர்களையும் இளம் தற்காப்புக் கலை மாணவர்களையும் ஒன்றிணைத்து சமூக நடவடிக்கையாக உருவானது.

    தியானம், ஜியு-ஜிட்சு, ஐகிடோ மற்றும் வன்முறையற்ற மோதலைத் தீர்க்கும் நுட்பங்களின் இணக்கமான கலவையான ஜென்டில் ஆர்ட்டின் அழகை இந்த இளம் மனங்களுக்கு அறிமுகப்படுத்துவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது.

    வன்முறையை மென்மையாக மாற்றுவதன் மதிப்பை அவர்களிடம் விதைப்பதை நோக்கமாகக் கொண்டோம். மேலும் இரக்கமுள்ள மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான கருவிகளை அவர்களுக்கு வழங்குகிறோம்.

    இந்த தேசிய விளையாட்டு தினத்தில், உங்களில் சிலரை ஜென்டில் ஆர்ட் பயிற்சியில் ஈடுபட ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையில், எங்கள் அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×