search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Rahul Gandhi
    X

    எம்.எஸ்.பி.க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் பெற அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்: ராகுல் காந்தி

    • பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் ராகுலை சந்தித்தனர்.
    • நீண்ட கால கோரிக்கைக்கு தீர்வுகாண தனிநபர் மசோதாவை தாக்கல் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பாராளுமன்ற வளாகத்தில் இன்று விவசாயிகள் சங்க தலைவர்களைச் சந்தித்தார்.

    பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 12 பேர் கொண்ட விவசாய குழுவினர், தங்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு தீர்வு காண தனி நபர் மசோதாவை தாக்கல் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    மேலும், நாடு முழுவதும் மோடி அரசின் உருவ பொம்மைகளை எரித்து, குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) உத்தரவாதத்தை சட்டப்பூர்வமாக்க வலியுறுத்தி புதிய போராட்டத்தை நடத்த உள்ளோம் என அறிவித்தனர்.

    இந்நிலையில், விவசாயிகள் குழுவினரை சந்தித்த ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    எங்கள் தேர்தல் அறிக்கையில் எம்.எஸ்.பி.யை சட்டப்பூர்வ உத்தரவாதத்துடன் குறிப்பிட்டுள்ளோம். அதை செயல்படுத்த முடியும். நாங்கள் இப்போது ஒரு கூட்டம் நடத்தினோம். அங்கு இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்களுடன் அழுத்தம் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், எம்.எஸ்.பி.க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் பெற அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என தெரிவித்தார்.

    Next Story
    ×