என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தீபாவளி, சாத் பூஜைக்காக நாடுமுழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கம்: அஸ்வினி வைஷ்ணவ்
- தீபாவளிக்காக 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
- கடந்த ஆண்டு தீபாவளி, சாத் பூஜையின்போது 4,500 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.
புதுடெல்லி:
தீபாவளி பண்டிகை மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
நாள்தோறும் கூடுதலாக 2 லட்சம் பயணிகள் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நாட்டின் கிழக்குப் பகுதிகளுக்கு ஏராளமான பயணிகள் பயணம் செய்வதால், வடக்கு ரெயில்வே கணிசமான எண்ணிக்கையிலான ரெயில்களை இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 7,000 சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்துள்ளோம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு ரெயில்களைத் தவிர, பயணத்திற்கான கூடுதல் திறனை உருவாக்க ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் அதிகரிக்கப்படுகின்றன என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் சாத் பூஜையின்போது மக்கள் கூட்டத்தை சமாளிக்க 4,500 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.