என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஒரு வருடத்தில் மிகக் குறைவு... டிசம்பரில் சில்லறை பணவீக்கம் 5.72 சதவீதமாக குறைந்தது
- ரிசர்வ் வங்கி வைத்துள்ள நிர்ணய வரம்புக்குள் சில்லறை பணவீக்கம் கடந்த இரண்டு மாதமாக குறைந்துள்ளது
- கிராமப்புறங்களில் நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் டிசம்பரில் 6.05 சதவீதமாக குறைந்துள்ளது
புதுடெல்லி:
2022 டிசம்பர் மாதத்துக்கான சில்லறை பணவீக்கம் தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சில்லறை பணவீக்கம், ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் 5.72 சதவீதமாக குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை குறைவதே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்க விகிதமானது அக்டோபர் மாதம் 6.77 சதவீதமாகவும், நவம்பர் மாதம் 5.88 சதவீதமாகவும் இருந்த நிலையில், டிசம்பர் மாதம் மேலும் சரிந்துள்ளது. ரிசர்வ் வங்கி வைத்துள்ள நிர்ணய வரம்பான 6 சதவீதத்துக்குள் சில்லறை பணவீக்கம் கடந்த இரண்டு மாதமாக தொடர்ந்து குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிராமப்புறங்களில் நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் நவம்பரில் 6.09 சதவீதமாக ஆக இருந்தது. டிசம்பரில் 6.05 சதவீதமாக குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் சில்லறை பணவீக்கம் 6.05 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 5.39 சதவீதமாகவும் உள்ளது.