என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் அதிகரிப்பு - மத்திய அரசு
- ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- கடந்த ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.71 சதவீதத்தில் இருந்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 6.71 சதவீதத்தில் இருந்த சில்லறை பணவீக்கம் இந்த மாதம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சில்லறை பணவீக்கம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 7.62 சதவீதமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. காய்கறிகள், மசாலாப் பொருட்கள், காலணிகள் மற்றும் எரிபொருள், விளக்குகள் ஆகியவற்றின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. முட்டை விலை சற்று குறைவாக இருந்துள்ளது.
இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. உற்பத்தி, மின்சாரம் மற்றும் சுரங்கத் துறைகளின் மோசமான செயல்பாடுகள் காரணமாக தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.