என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலையில் ரூ.357.47 கோடி வருமானம்
- அரவணை பிரசாதம் விற்பனை வரவு ரூ.146 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 700 ஆகும்.
- காணிக்கை முழுவதும் இன்னும் எண்ணி முடிக்காததால் அதன் வருவாய் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
சபரிமலை:
சபரிமலை சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பி.எஸ். பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மொத்த வருமானம் ரூ.357 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 909 ஆகும். கடந்த ஆண்டு இதே கால அளவில் மொத்த வருமானமாக ரூ.347 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 884 கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.10.35 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
அரவணை பிரசாதம் விற்பனை வரவு ரூ.146 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 700 ஆகும். அப்பம் பிரசாதம் விற்பனை மூலம் ரூ.17 கோடியே 64 லட்சத்து 77 ஆயிரத்து 795 கிடைத்துள்ளது.
கோவிலில் நேற்று வரை 50 லட்சத்து 6 ஆயிரத்து 412 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5 லட்சம் அதிகம். மேலும் காணிக்கை முழுவதும் இன்னும் எண்ணி முடிக்காததால் அதன் வருவாய் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
நாளை (21-ந் தேதி) காலையில் பந்தளம் அரச குடும்ப உறுப்பினரின் தரிசனத்திற்கு பிறகு கோவில் நடை காலை 7 மணிக்கு அடைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.