search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2036-ல் 1000 ஆண்களுக்கு 952 பெண்கள்: மத்திய அரசு ஆய்வில் தகவல்
    X

    2036-ல் 1000 ஆண்களுக்கு 952 பெண்கள்: மத்திய அரசு ஆய்வில் தகவல்

    • 2036-ல் இந்தியாவின் மக்கள் தொகை 152.2 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • 2011-ல் பெண்கள் சதவீதம் 48.5 ஆக இருக்கும் நிலையில் 2036-ல் 48.8 சதவீதமாக இருக்கும்.

    இந்தியாவில் 2011 கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் என பாலின விகிதம் இருந்தது. இது 2036-ல் 1000-க்கு 952 ஆக உயரும் என புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தியா 2023-ல் பெண்கள் மற்றும் ஆண்கள் (Women and Men in India 2023) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    1000 ஆண்களுக்கு 952 பெண்கள் என்பது பாலிய சமத்துவத்திற்கான நேர்மறை குறியீட்டை காட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2036-ல் இந்தியாவின் மக்கள் தொகை 152.2 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011-ல் பெண்கள் சதவீதம் 48.5 ஆக இருக்கும் நிலையில் 2036-ல் 48.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    15 வயதிற்குட்பட்ட நபர்களின் விகிதம் 2011 முதல் 2036 வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கருவுறுதல் குறைவதால் இருக்கலாம் என்று அது கூறியது. மாறாக, இந்த காலகட்டத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை விகிதம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2016 முதல் 2020 வரை கருவுறுதல் சதவீதம் 20-24 வயதில் 135.40-ல் இருந்து 113.6 ஆக குறைந்துள்ளது. 25-29 வயதில் 166-ல் இருந்து 139.6 ஆக குறைந்துள்ளது.

    அதேவேளையில் 35-39 வயதில் கருவுறுதல் விகிதம் 32.7 சதவீதத்தில் இருந்து 35.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது வாழ்க்கையில் செட்லாகிய பின்னர் குடும்பத்தை விரிவுப்படுத்திக் கொள்ளலாம் என பெண்கள் நினைக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரசவத்தின் போது தாய் இறப்பது பெரும் அளவில் குறைந்துள்ளது எனவும், பிரசவத்தின்போது பெண் சிசுக்கள் அதிகமாக இறக்கும் நிலையில் தற்போது ஆண்- பெண் சிசு சமமான விகிதத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×