search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காசா அழிவிற்கு ஆதரவு அளிப்பது அவமானம்: மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி விமர்சனம்
    X

    காசா அழிவிற்கு ஆதரவு அளிப்பது அவமானம்: மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி விமர்சனம்

    • ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது.
    • தற்போது பிறந்த குழந்தைகள் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக இன்குபெட்டரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, உயிர் இழக்கும் சூழ்நிலை.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,400 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக காசா மீது, இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள் முதல் முதியோர் வரை உயிரிழந்து வருகின்றனர்.

    காசாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் குழந்தைகள் பெருமளவில் அடங்குவர். தொடக்கத்தில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியபோது, இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக இந்திய பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    காசாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகமானோர் குழந்தைகள். என்ன ஒரு இழிவான, அவகரமான மைல்கல். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. தற்போது பிறந்த குழந்தைகள் ஆக்சிஜன் குறைபாடால் இன்குபெட்டரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, உயிரை விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த படுகொலை, போர் நிறுத்தம் ஏற்படாதது, அதிக தாக்குதல், அதிக வன்முறை, அதிக மக்கள் கொல்லப்படுவது, மேலும் துன்பம் போன்றவை ஆதரவு அளிப்போர் மனசாட்சிக்கு இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. இந்த அழிவுக்கு ஆதரவு அளிப்பது அவமானம்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    காசா பகுதியை ஆக்கிரமித்து அப்பகுதியில் குடியமர்வை செயல்படுத்த முயல்வதாக உலக நாடுகள் இஸ்ரேல் மீது குற்றம்சாட்டின. இதுதொடர்பாக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா வாக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×