search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தல் சூழலை பிரதிபலிக்கிறது: சரத்பவார் கருத்து
    X

    கர்நாடக தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தல் சூழலை பிரதிபலிக்கிறது: சரத்பவார் கருத்து

    • பா.ஜனதாவை தோற்கடிப்பது ஒன்றே எங்களின் நோக்கமாகும்.
    • தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவின் சில பகுதிகளில் போட்டியிட்டது.

    நாக்பூர் :

    கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளின் போக்கு 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சூழலை பிரதிபலிக்கிறது. பா.ஜனதாவை தோற்கடிப்பது ஒன்றே எங்களின் நோக்கமாகும்.

    கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி, ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தற்போது பா.ஜனதா ஆட்சியில் இல்லை. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகத்தில் வெற்றி பெற உதவி உள்ளது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவின் சில பகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இது ஒரு முயற்சி மட்டுமே. கர்நாடகத்தில் பா.ஜனதா முன்வைத்த 'மோடி ஹை தோ மம்கின் ஹை' (மோடி இருந்தால் அனைத்தும் சாத்தியம்) என்ற முழக்கத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். ஒரு தனி நபர் அனைத்து அதிகாரங்களையும் வைத்திருப்பதை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×