என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஜனாதிபதி தேர்தல்: மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த சரத் பவார்
- திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் சரத் பவாரை ஆதரித்தன.
- கூட்டத்தில் பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், டிஆர்எஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
புதுடெல்லி:
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை நிறுத்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினார். பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்காக இன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி உள்ளார். இக்கூட்டத்தில் பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
இக்கூட்டத்தில் பொது வேட்பாளரை யாரை நிறுத்தலாம் என்பது குறித்து கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்தலாம் என மம்தா தெரிவித்தார். ஆனால் அவரது யோசனையை சரத் பவார் ஏற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
அதன்பின்னர் மேற்கு வங்காள முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா ஆகியோரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் சரத் பவாரை ஆதரித்தன. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட தயங்குகிறார். "சரத் பவார் ஒப்புக்கொண்டால், அனைவரும் அவருக்கு ஆதரவளிப்பார்கள். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை, இது தொடர்பாக விவாதிக்க உள்ளோம்" என மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான வரைவுத் தீர்மானத்தை மம்தா பானர்ஜி சமர்ப்பித்ததாகவும், ஆனால் இதற்கு மற்ற கட்சிகள் உடன்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விவாதிக்க கூட்டம் கூட்டப்பட்டதாக பலர் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்