search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சரத் பவார்: காரணம் இதுதானாம்...
    X

    பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சரத் பவார்: காரணம் இதுதானாம்...

    • பாஜக கடந்த முறை 23 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 9 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது.
    • சரத் பவார் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. அஜித் பவார் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

    மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. 48 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் 35-க்கும் மேற்பட்ட இடங்களை எதிர்பார்த்தது. ஆனால் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி, சரத் பவார் கட்சி இணைந்து பாஜக கூட்டணி பலத்த அடி கொடுத்தது. 30 தொகுதிகளை வென்று அசத்தியது.

    இந்த நிலையில் இன்று மூன்று கட்சிகள் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சரத் பவார் "அரசியல் சூழ்நிலையை மகா விகாஸ் அகாதிக்கு சாதகமாக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

    மோடி மற்றும் பாஜக 18 தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்த நிலையில் 15 தொகுதிகளில் தோல்வியடைந்தது. சரத் பவார் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அஜித் பவார் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

    மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (பாஜக, தேசியவாத காங்கிரஸ்- அஜித் பவார், சிவசேனா- ஏக்நாத் ஷிண்டே) மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.

    பாஜக 9 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

    30 இடங்களில் மகா விகாஸ் அகாதி (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்- சரத்பவார், சிவசேனா-உத்தவ் தாக்கரே) வெற்றி பெற்றது. பிரிந்து சென்றவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என இந்த கூட்டணி நம்புகிறது. மேலும், விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி நீடிக்கும் என எதிர்பார்க்கிறது.

    சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில் "மக்களவை தேர்தல் வெற்றி மகா விகாஷ் அகாதிக்கான முடிவு அல்ல. தொடக்கம்" என்றார்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் சவான், "மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் விரைவில் அரசு மாறும்" என்றார்.

    கடந்த முறை 23 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    Next Story
    ×