என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நேரு பிறந்த தினம்: நினைவிடத்தில் சோனியா காந்தி, கார்கே மலர்தூவி மரியாதை
- நேரு நினைவிடத்தில் சோனியா காந்தி, கார்கே மரியாதை செலுத்தினர்.
- பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் நேரு பிறந்த நாள் குறித்து பதிவிட்டிருந்தார்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவர்ஹலால் நேருவின் பிறந்த தினம் இன்று. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி, பாராளுமன்ற மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் நேருவின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல் பாராளுமன்றத்தில் உள்ள அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருக்கு அவரது பிறந்த தினத்தில் மரியாதை செலுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜவர்ஹலால் நேரு 1889-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந்தேதி உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் பிறந்தார். 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ந்தேதி காலமானார். இந்தியா சுதந்திரம் வாங்கிய நிலையில், முதல் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இவர் குழந்தைகள் மீது அதிக அளவில் அன்பு செலுத்தினார். இதனால் மறைவுக்குப்பின் இவரது பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது பள்ளிகளில் நேருவை நினைவு கூறும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.