என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிர்ப்பு: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
- அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார்.
- ஓபிஎஸ் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புதுடெல்லி:
சென்னை வானகரத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட நிர்வாகிகள் நீக்கம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு 25-ம் தேதி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த டிசம்பர் 8-ம் தேதி விசாரித்தது. அதன்பின், வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பில் தலையிட முடியாது எனக்கூறிய சுப்ரீம் கோர்ட், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எப்படி தடைவிதிக்க முடியும் என கேள்வி எழுப்பியது. ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள சிவில் விவகார வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.