என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பூரி கடற்கரையில் 125 மணல் ரதங்களை உருவாக்கினார் சுதர்சன் பட்நாயக்
- ஒடிசா பூரி கடற்கரையில் மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளார்.
- ரத யாத்திரை திருநாளில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை இனி பயன்படுத்த வேண்டாம்.
ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் யாத்திரை விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி தரப்பட்டதால் யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 ரதங்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா வலம் வர உள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பூரி ஜெந்நாதர் யோயில் யாத்திரை திருவிழாவையொட்டி, ஒடிசா பூரி கடற்கரையில் மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து சுதர்சன் பட்நாயக் கூறுகையில், " ஜெகநாதரின் புனித ரத யாத்திரையைக் குறிக்கும் வகையில் 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளோம். இது எங்களின் புதிய உலக சாதனையாக இருக்கும்.
மேலும், இந்த ரத யாத்திரையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று குறிக்கும் வகையிலும் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.