என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேரளாவில் நோய் கொடுமையால் டாக்டர் தம்பதி தற்கொலை
- தற்கொலை செய்வதற்கு முன்பு ராம்மனோகர்-ஷோபா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
- தங்களுக்கு நோய் இருப்பதாகவும், மகள்-மருமகனுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மலரம்பா வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் டாக்டர் ராம்மனோகர் (வயது 70). இவரது மனைவி ஷோபா (68), குழந்தைகள் நல மருத்துவர்.
இவர்கள் திருச்சூரில் உள்ள திரிபிரயாரில் கிளினீக் நடத்தி வந்தனர். இதனால் அங்கேயே வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோழிக்கோடு வந்தனர். இவர்களது மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். அவர் தான் பெற்றோரை பராமரித்து வந்துள்ளார்.
நேற்று ராம்மனோகர் அறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து அவரது மகள் அறைக்கு சென்று பார்த்தபோது, தாயும், தந்தையும் மயங்கி கிடந்துள்ளனர். அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது 2 பேரும் இறந்துவிட்டது தெரிய வந்தது. அவர்கள் அதிக அளவு மாத்திரை தின்று தற்கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தற்கொலை செய்வதற்கு முன்பு ராம்மனோகர்-ஷோபா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் தங்களுக்கு நோய் இருப்பதாகவும், மகள்-மருமகனுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.