search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பட்ஜெட்- ரூ.3லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது- லைவ் அப்டேட்ஸ்

    • அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கிறது.
    • 2024- 25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    நடப்பு 2024- 25-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

    இதற்காக பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர்.

    அதன்படி 2024- 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

    இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

    Live Updates

    • 23 July 2024 6:31 AM GMT

      பீகாரில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய ரூ.21,400 கோடி நிதி

    • 23 July 2024 6:28 AM GMT

      பழங்குடியின மக்களுக்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

    • 23 July 2024 6:27 AM GMT

      அதிக பத்திரப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தப்படும்...

    • 23 July 2024 6:27 AM GMT

      25 ஆயிரம் ஊரக வாழ்விடங்களை இணைக்கும் வகையில் கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது...

    • 23 July 2024 6:26 AM GMT

      ஒடிசாவில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்- நிர்மலா சீதாராமன்

    • 23 July 2024 6:26 AM GMT

      வெள்ள மேலாண்மைக்காக அசாம் மாநிலத்திற்கும் நிதி உதவி வழங்கப்படும்...

    • 23 July 2024 6:26 AM GMT

      பீகார் வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு

    • 23 July 2024 6:21 AM GMT

      முதலீட்டு செலவினங்களுக்காக இந்த ஆண்டு ரூ.11.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்

    • 23 July 2024 6:17 AM GMT

      கூடுதலாக சிறிய வகை அணுமின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்- நிர்மலா சீதாராமன்

    • 23 July 2024 6:17 AM GMT

      பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரு கோடி நகர்ப்புற ஏழைகளின் வீடு தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு

    Next Story
    ×