என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேரளாவில் முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் மோதி தொழிலாளி பலி
- கோழிக்கோடு அருகே வந்தே பாரத் ரெயில் சென்ற போது தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ஒருவர் மீது ரெயில் மோதியது.
- வந்தே பாரத் ரெயில் ஓடத்தொடங்கிய பின்பு கேரளாவில் நடந்த முதல் விபத்து இதுவாகும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின்பு இந்த ரெயில் ஓடதொடங்கியதும் 2 முறை இந்த ரெயில் மீது சிலர் கல்வீசி தாக்கினர்.
இதில் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை கோழிக்கோடு அருகே வந்தே பாரத் ரெயில் சென்ற போது தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ஒருவர் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார், பலியான நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள். வந்தே பாரத் ரெயில் ஓடத்தொடங்கிய பின்பு கேரளாவில் நடந்த முதல் விபத்து இதுவாகும்.