என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு
- 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் அரசு வழக்கறிஞராக யு.யு.லலித் செயல்பட்டார்.
- 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பணியாற்றி நவம்பர் 8-ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமிக்கப்படுகிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்று ஓய்வு பெற்றதையடுத்து யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார்.
தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு காலை 10.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957-ல் பிறந்த யு.யு.லலித் 1983-ம் ஆண்டில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார்.
நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் அரசு வழக்கறிஞராக யு.யு.லலித் செயல்பட்டார். மேலும் இவர், 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பணியாற்றி நவம்பர் 8-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.