search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நொய்டாவில் கார் மோதி 500 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட ஸ்விக்கி ஊழியர் பலி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நொய்டாவில் கார் மோதி 500 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட ஸ்விக்கி ஊழியர் பலி

    • கௌஷல் இறந்ததை உறுதி செய்ததை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • டெல்லியில் 20 வயது பெண் ஒருவர் கார் மீது மோதி சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சில மணி நேரங்களில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஸ்விக்கி உணவு டெலிவெரி செய்யும் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்தவர் கௌஷல். இவர், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இரவில் உணவு டெலிவெரி செல்வதற்காக தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது, நொய்டா செக்டார் 14 பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே வேகமாக வந்த கார் ஒன்று கௌஷல் சென்ற வாகனம் மீது மோதியது.

    இதில், கீழே தடுமாறி விழுந்த கௌஷல் காருக்கு அடியில் சிக்கினார். விபத்தை ஏற்படுத்திய அந்த கார், காரில் கௌஷல் சிக்கியது தெரியாமல் சுமார் 500 மீட்டர் வரை கார் இழுத்து சென்றது.

    விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கோவில் அருகே காரை நிறுத்திவிட்டு கௌஷலின் உடல் வெளியே வந்தவுடன் கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், கௌஷலின் சகோதரர் அமித் அவருக்கு போன்ற செய்தபோது, அங்கிருந்தவர்கள் அழைப்பை ஏற்று விபத்து குறித்து அவர்களுக்கு தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கௌஷல் இறந்ததை உறுதி செய்ததை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    டெல்லியில் 20 வயது பெண் ஒருவர் கார் மீது மோதி சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சில மணி நேரங்களில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×