search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓய்ந்தது பிரசாரம்.. நாளை தேர்தல் - ஜார்கண்ட் வெற்றிக்கு பாஜகவின் புதிய வியூகம் கை கொடுக்குமா?
    X

    ஓய்ந்தது பிரசாரம்.. நாளை தேர்தல் - ஜார்கண்ட் வெற்றிக்கு பாஜகவின் புதிய வியூகம் கை கொடுக்குமா?

    • மத்திய அமைச்சர் அமித் ஷாவும் தனது பிரசாரங்களில் அதையே மீண்டும் மீண்டும் பேசி வந்தார்.
    • யோகி ஆதித்யநாத் உருவாக்கிய இந்த கோஷம் பிரதமர் மோடியாலும் மேடைகளில் உச்சரிக்கப்பட்டது

    ஜார்கண்ட் தேர்தல்

    81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஹேமந்த் சோரனின் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

    ஹேமந்த் சோரன் - சம்பாய் சோரன்

    சட்ட விரோதமாகச் சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை பதிந்த நில முறைகேடு தொடர்பான இரண்டு வருட பழைய வழக்கில் கடந்த மக்களவை தேர்தல் சமயத்தில் ஹேமந்த் சோரன் திடீரென கைது செய்யப்பட்டார்.

    அந்த சமயத்தில் ஜார்கண்ட் முதல்வராக கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் பணியாற்றினார். 5 மாதங்கள் கடந்த ஜூன் வாக்கில் ஹேம்நாத் சோரன் ஜூலையில் மீண்டும் முதல்வரானார். இதைத்தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் சம்பாய் சோரன் கடைசி நேரத்தில் பாஜக பக்கம் தாவியது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    கூட்டணி

    கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி மீண்டும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியாக களமிறங்குகிறது. அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகியவற்றுடன் பாஜக களமிறங்குகிறது. சம்பாய் சோரன் சரைகேலா தொகுதியில் பாஜக வேட்பாளராக நிற்கிறார்.

    பாஜக தேர்தல் வியூகம்

    இந்த தேர்தலில் பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அசாம் பாஜக முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஜார்கண்ட் தேர்தல் பொறுப்பு தலைவராக இந்த கருத்துக்களை தீவிரமாக மக்களிடையே பரப்ப முயற்சி மேற்கொண்டார்.

    சட்டவிரோதமாக உள்ளே நுழைந்த வங்கதேச முஸ்லிம்களும், ஜார்கண்டில் உள்ள முஸ்லிம்களும் பழங்குடியின பெண்களைத் திருமணம் செய்வது லவ் ஜிகாத் என்றும் திருமணத்தின் மூலம் அவ்வாறு பெறப்படும் நிலம் லேண்ட் ஜிகாத் என்று பாஜக பிரசாரம் செய்தது. மத்திய அமைச்சர் அமித் ஷாவும் தனது பிரசாரங்களில் அதையே மீண்டும் மீண்டும் பேசி வந்தார். பாஜக ஆதரவு அல்லாத இந்துக்களைக் குறிவைத்து பதேங்கே தோ கதேங்கே [ஒன்றுபட்டால் பாதுகாப்பு தனியாக இருந்தால் வெட்டப்படுவீர்கள்] என்ற கோஷமும் பிரத்தமானதாக பாஜக மேடைகளில் ஒலித்தது.

    உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவாக்கியவர் ஆவார். கோஷம் பிரதமர் மோடியாலும் மேடைகளில் உச்சரிக்கப்பட்டது. மகாராஷ்டிர தேர்தலிலும் இந்த கோஷமே பாஜகவால் முன்னிறுத்தப்படுகிறது. ஆனால் இது இந்து மதத்தினர் தாங்கள் ஆபத்தில் இருப்பதுபோன்ற போலியான பிம்பத்தை உருவாகும் உளவியல் தாக்குதல் என கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் முன்வைக்கின்றனர். ஜார்கண்ட் இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் சொந்தமா என்ற கேள்வியையும் யோகி பிரசாரத்தில் எழுப்புயிருந்தார்.

    ஜார்கண்டில் முந்தைய தேர்தல்களில் பழங்குடியினரிடையே கிறிஸ்துவ ஆதிக்கத்தை முன்னிறுத்தி பாஜக தனது பிரசார வியூகங்களை வகுத்துச் செயல்பட்ட நிலையில் இந்த தேர்தலில் இஸ்லாமிய ஆதிக்கம் என்பதை நோக்கி பாஜக மக்களைத் திருப்பும் வியூகத்துடன் செயல்பட்டது. ஆனால் பாஜக கூறும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் என்பதை நிரூபிக்கும் வகையிலான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் மறுக்கின்றன.

    Next Story
    ×