என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பெண் டாக்டர் கொலை.. முன்னாள் பிரின்சிபலை சுற்றும் சர்ச்சை.. வீட்டு வாசலில் காத்துக்கிடந்த சி.பி.ஐ.
- சுமார் ஒன்றை மணி நேரம் கழித்தே சஞ்சய் ராய் வீட்டின் கதவைத் திறந்தார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்டதாக சஞ்சய் ராய் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் நடந்த குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளி வந்த வண்ணம் உள்ளன. பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
சஞ்சய் ராய் மீது நிதி முறைகேடுகள் தொடர்பாகவழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் விசாரணையைத் தொடங்கினர்.அதன்படி, மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் துணை முதல்வரான சஞ்சய் வசிஸ்ட் ஆகியோர் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் நேற்றைய தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் சந்தீப் கோசின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் சுமார் 90 நிமிடங்களாக வெளியில் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றை மணி நேரம் கழித்தே சஞ்சய் ராய் வீட்டின் கதவைத் திறந்தார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் 11 மணிநேரமாக சோதனை நடத்திய அதிகாரிகள் அவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதேபோல் ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் உள்ள முன்னாள் முதல்வர் அலுவலகத்திலும், கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேட்பாரற்ற சடலங்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியது, பயோமெடிக்கல் கழிவுகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் சந்தீப் கோஷ் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்