search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    லட்டுகள் புனிதத்தன்மையை மீட்டெடுத்து விட்டோம்- திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
    X

    லட்டுகள் புனிதத்தன்மையை மீட்டெடுத்து விட்டோம்- திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

    • திருப்பதி லட்டுகளின் தெய்வீகத்தன்மையும் தூய்மையும் இப்போது கறைபடாமல் உள்ளது.
    • லட்டு தயாரிக்க கலப்படம் செய்யப்பட்ட நெய்யை வழங்கிய ஒப்பந்ததாரரை தடுப்புப்பட்டியலில் வைக்கும் பணியில் தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.

    திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆந்திர அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதனிடையே நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான் என்று தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இந்நிலையில் திருப்பதி லட்டுகள் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு:-

    திருப்பதி லட்டுகளின் தெய்வீகத்தன்மையும் தூய்மையும் இப்போது கறைபடாமல் உள்ளது. திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உள்ளது. அனைத்து பக்தர்களின் திருப்திக்காக லட்டு பிரசாதத்தின் புனிதத்தை பாதுகாக்க தேவஸ்தானம் உறுதிபூண்டுள்ளது

    இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ் கூறும்போது, லட்டு தயாரிக்க கலப்படம் செய்யப்பட்ட நெய்யை வழங்கிய ஒப்பந்ததாரரை தடுப்புப்பட்டியலில் வைக்கும் பணியில் தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×