search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவில் ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை வெளியீடு
    X

    திருப்பதி கோவில் ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை வெளியீடு

    • அங்க பிரதடசணத்திற்கான டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் 11 மணிக்கும் வெளியிடப்படுகிறது.
    • ஸ்ரீவாரி சேவை ஒதுக்கீடு 27-ந் தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. இந்த சேவை டிக்கெட்டுகளை 20-ந் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம். அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு லக்கி டிப்பில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட்டை பெறலாம்

    இதேபோல், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதிபாலங்கர சேவா டிக்கெட்டுகள் 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். உற்சவ சேவைகளுக்கான ஜூலை மாத ஒதுக்கீடு, அவற்றின் தரிசன ஸ்லாட்டுகள் 22-ந் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும்.

    அங்க பிரதடசணத்திற்கான டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் 11 மணிக்கும் வெளியிடப்படுகிறது.

    முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ந் மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மாலை 3 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு வெளியிடப்படும்.

    ஸ்ரீவாரி சேவை ஒதுக்கீடு 27-ந் தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும்.

    பக்தர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    Next Story
    ×