search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசாகூட வரவில்லை: டி.ஆர்.பாலு
    X

    வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசாகூட வரவில்லை: டி.ஆர்.பாலு

    • நீட் விலக்கு விவகாரம், வெள்ள நிவாரண நிதி, மதுரை எய்ம்ஸ், சென்னை 2-ம் கட்ட மெட்ரோ பணிகள், சேது சமுத்திர திட்டம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பேசினார்.
    • சென்னை 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு உதவவில்லை என குறை கூறினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலுவும் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பாராமுகம் காட்டுவதாக பல விஷயங்களை குறிப்பிட்டார். குறிப்பாக நீட் விலக்கு விவகாரம், வெள்ள நிவாரண நிதி, மதுரை எய்ம்ஸ், சென்னை 2-ம் கட்ட மெட்ரோ பணிகள், சேது சமுத்திர திட்டம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பேசினார்.

    தமிழகத்தில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மந்திரிகள், அதிகாரிகள் குழு பார்வையிட்டதையும், ஏற்பட்ட சேதங்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி கேட்டு முதலமைச்சர், பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தியதையும், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் உள்துறை மந்திரியிடம் நேரில் வற்புறுத்தியதையும் குறிப்பிட்ட டி.ஆர்.பாலு, இதுவரை ஒரு பைசா கூட வரவில்லை எனக்கூறி ஆதங்கப்பட்டார்.

    மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தில் முஸ்லிம்கள், இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படாததை சுட்டிக்காட்டிய அவர், மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அவற்றை ஏற்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். 2014-ம் ஆண்டு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறி குறிப்பிட்ட அவர், அப்படியெனில் இதுவரை 20 கோடி வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

    இதுபோல ஜி.எஸ்.டி. திட்டத்தின் குறைகளை எடுத்துரைத்தார். சென்னை 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு உதவவில்லை என குறை கூறினார். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை விடுத்தார். இறுதியாக மாநில அரசுகளில் கவர்னர்களின் தலையீடு விவகாரத்தையும் குறிப்பிட்டார்.

    Next Story
    ×