என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மகாராஷ்டிராவில் கனமழை - மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை
- புனேயில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
- இதனால் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேயில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழையால் புனேவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புனேவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியில் செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இடைவிடாது பெய்து வரும் மழையால் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டுள்ளது.
புனேவைத் தவிர, பால்கர், ராய்காட் மற்றும் சதாரா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக கல்யாண்-கசரா ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
ரத்னகிரி மாவட்டத்தில் ஓடும் வஷிஷ்டி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் சிப்லுனில் ரெயில் சேவை நிறுத்தப்படுகிறது என கொங்கண் ரெயில்வே தெரிவித்துள்ளது.