என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மணிப்பூர் விவகாரம்: டெல்லியில் அமித் ஷா தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம்
- பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்காக, மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் சென்றிருந்தபோது ஜரிபாம் மாவட்டமும் பற்றி எரிந்தது.
- கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய மோதல் இனக்கலவரமாக, 400 நாள்களுக்கும் மேல் கொளுந்துவிட்டு எரிகிறது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க, வன்முறைக் காடானது மணிப்பூர்.
மோதல்களும் கலவரங்களும் தீ வைப்பு சம்பவங்களும் தொடர்கின்றன. மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்து வருகிறது. வீடுகள் தீக்கிரையானதால், பள்ளிகளும், அரசுக் கட்டிடங்களும், முகாம்களாகின. மணிப்பூரில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இனக்கலவரத்தில் இதுவரை பாதிக்கப்படாமல் இருந்தது ஜரிபாம் மாவட்டம்தான். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்காக, மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் சென்றிருந்தபோது ஜரிபாம் மாவட்டமும் பற்றி எரிந்தது.
அங்கு புதாங்கல் என்ற இடத்தில் மெய்தி இனத்தவரின், 70-க்கும் அதிகமான வீடுகள் தீ வைக்கப்பட்டன. ஜூன் 6-ந்தேதி காணாமல் போன ஒருவரின் உடல், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறை, மத்திய பாதுகாப்புப்படை, துணை ராணுவம் என ஒட்டுமொத்தமாக குவிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய மோதல் இனக்கலவரமாக, 400 நாள்களுக்கும் மேல் கொளுந்துவிட்டு எரிகிறது. இந்நிலையில், மணிப்பூரில் பாதுகாப்பு நிலைமையை உறுதிப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
டெல்லியில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த உயர் அதிகாரிகள், ராணுவம் மற்றும் இதர பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.