search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்த பிரதமர் மோடியின் கனவு நனவாகிறது- மத்திய மந்திரி ஹர்தீப்சிங் புரி
    X

    மத்திய மந்திரி ஹர்தீப்சிங் புரி

    ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்த பிரதமர் மோடியின் கனவு நனவாகிறது- மத்திய மந்திரி ஹர்தீப்சிங் புரி

    • 25 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வீட்டு வசதித் துறை மந்திரி ஹர்தீப்சிங் புரி, ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி முன்னெடுப்புப் பணிகள் அங்குள்ள மக்களுக்கும், நாட்டுக்கும் இடையே உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி அரசியல் பிரிவு சட்ட 370 மற்றும் 35ஏ நீக்கப்பட்டதன் மூலம் சாத்தியமாகி உள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்த பிரதமர் மோடியின் கனவு நனவாகிறது

    11,721 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக 25 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 13,600 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 7 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. ஜம்மு-தில்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் காஷ்மீர் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×