என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மத்திய மந்திரியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்- மேற்கு வங்காளத்தில் பரபரப்பு
- உள்ளூர் பாஜக அலுவலகத்திற்கு சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
- மத்திய மந்திரி பிரமாணிக் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா:
மத்திய உள்துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் இன்று மேற்கு வங்காள மாநிலம், கூச் பெஹாருக்கு சென்றபோது அவரது வாகனம் மீது திடீரென ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலில் மந்திரியின் கார் கண்ணாடி உடைந்தது. தாக்குதல் நடத்திய கும்பல் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.
திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் நடத்தியதாக மத்திய மந்திரி பிரமாணிக் குற்றம்சாட்டி உள்ளார். மந்திரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாமானியனின் நிலையை கற்பனை செய்து பார்த்துககொளளுங்கள. மேற்கு வங்காளத்தில் ஜனநாயகத்தின் நிலை எப்படி இருக்கிறது? என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
கூச் பெஹரில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரமாணிக், உள்ளூர் பாஜக அலுவலகத்திற்கு சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு நடத்தி, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மத்திய மந்திரி பிரமாணிக் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, சமீபத்தில் கூச் பெஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மத்திய மந்திரி பிரமானிக்கை விமர்சித்தார். கொலைக்கு பிறகு பழங்குடியினரின் குறைகளை போக்க மத்திய மந்திரி பிரமாணிக் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
பிரமாணிக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் அறிவித்தது. இந்த பகுதியில் பிரமாணிக் எங்கு சென்றாலும் கருப்புக் கொடிகளை காட்டுவோம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் உதயன் குஹா கூறியிருந்தார்.