search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    car helmet
    X

    காரில் ஏன் ஹெல்மெட் அணியவில்லை.. பத்திரிகையாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்த உ.பி. போலீஸ்

    • காரில் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் இருக்கிறதா? என பத்திரிகையாளர் கேள்வி
    • அபராதம் கட்டவில்லையென்றால் நீதிமன்றம் செல்ல நேரிடும் எனக் கூறியுள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் காரில் சென்ற துஷார் சக்ஸேனா என்ற பத்திரிகையாளர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி நொய்டா போலீசார் ரூ.1000 அபராதம் விதித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ராம்பூர் ராம்பூர் நகரில் வசி வசிக்கும் துஷார் சக்ஸேனா வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெள்ளை நிற ஹூண்டாய் காரை அவர் வாங்கினார்.

    அங்கிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள கவுதம புத்தா நகரில் அவர் கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாததற்காக 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று அவரது செல்போனுக்கு 9 மாதங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

    தவறுதலாக மெசேஜ் வந்துள்ளது என்று அவர் முதலில் நினைத்துள்ளார். ஆனாலும் அபராதம் செலுத்தக் கூறி அவருக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்துள்ளன.

    இது குறித்து போலீசாரிடம் அவர் கேட்டபோது, அபராதம் கட்டவில்லையென்றால் நீதிமன்றம் செல்ல நேரிடும் எனக் கூறியுள்ளனர்.

    இதுவரை கவுதம புத்தா நகருக்கு காரில் சென்றதே இல்லை எனக் தெரிவித்த துஷார், காரில் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    2017 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் இதேபோன்று ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. மாருதி ஆம்னி காரை ஒட்டிய நபருக்கு ஹெல்மெட் அணியாததற்காக போலீசார் அபராதம் விதித்தனர். இதனையடுத்து அந்த நபர் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்ட தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×