search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பண்டிகைகள் கொண்டாடும்போது, தேர்தல் நாள் ஏன் முடியாது- பா.ஜனதா தலைவர்
    X

    நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பண்டிகைகள் கொண்டாடும்போது, தேர்தல் நாள் ஏன் முடியாது- பா.ஜனதா தலைவர்

    • ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய குழு அமைப்பு
    • ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

    பா.ஜனதா ''ஒரே நாடு ஒரே தேர்தல்'' என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.

    இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே நாளில் பண்டிகைகைள் கொண்டாடும்போது, ஏன் தேர்தல் நாளை கொண்டாட முடியாது என பா.ஜனதா பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது:-

    நாம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகள் நாடுகள் முழுவதும் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. ஆகவே, தேர்தல் நாளை நாம் ஏன் ஒன்றாக கொண்டாட முடியாது.

    பெண்களுக்கான அதிகாரத்தை குறித்து பேசிக்கொண்டு மட்டுமே இருந்த நிலையில், பிரதமர் மோடி அரசு மசோதாவை தாக்கல் செய்து சரியான பதிலடி கொடுத்துள்ளது.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×