search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    haryana assembly election vinesh phogat
    X

    அரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் வினேஷ் போகத்

    • வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
    • காங்கிரசில் இணைந்த பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டது.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டி அன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக்கூறி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனாலும், வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் நேற்று மதியம் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்நிலையில் அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில் ஜுலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரசில் இணைந்த பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. .

    காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பாக இந்திய ரெயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை வினேஷ் போகத் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×