என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சட்டென சரிந்த காசநோய் பாதிப்பு.. நட்டா போட்ட பதிவு.. பிரதமர் மோடி பயங்கர ஹேப்பி..!
- இந்தியாவை உருவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம்.
- காசநோய் பாதிப்பு சரிவடைந்து இருக்கிறது.
அரசு மேற்கொண்டு வரும் புதிய முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்தியாவில் காசநோய் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நாம் தொடர்ந்து காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம், என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா எக்ஸ் தள பதிவில், "2015 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் காசநோய் பாதிப்பு 17.7 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அங்கீகரித்துள்ளது. உலகளவில் காசநோய் பாதிப்பு 8.3 சதவீதம் வரை சரிந்துள்ளது. இந்த நிலையாவில் சர்வதேச அளவை விட இருமடங்கு வரை காசநோய் பாதிப்பு சரிவடைந்து இருக்கிறது."
இது குறித்த எக்ஸ் தள பதிவில், "பாராட்டப்பட வேண்டிய முன்னேற்றம், இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் புதிய முயற்சிகளின் விளைவாகவே காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது. கூட்டுணர்வின் மூலம், காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம்," என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.