search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    LIVE

    மேற்கு வங்க ரெயில் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்... லைவ் அப்டேட்ஸ்...

    • சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே ரெயில் விபத்தில் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் 15பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்த 60 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Live Updates

    • 17 Jun 2024 11:43 AM IST

      மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரெயில் விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். ரெயில் விபத்து நடந்த இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×