search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வீட்டுக்கு வந்து அன்னை தெரசா என்னிடம் சொன்ன விஷயம்.. வயநாடு பிரசாரத்தில் பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி
    X

    வீட்டுக்கு வந்து அன்னை தெரசா என்னிடம் சொன்ன விஷயம்.. வயநாடு பிரசாரத்தில் பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி

    • பிரியங்காவை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர்.
    • என்னைப் பார்க்க அன்னை தெரசா எனது அறைக்கே வந்தார்.

    கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக நீடிப்பதால் வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம், வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது.

    இதன்படி வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் ராகுலின் தங்கையுமான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதன் மூலம் அவர் முதல் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் கடந்த கடந்த 23-ந் தேதி வயநாடு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

    பிரியங்காவை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று முதல் வயநாட்டில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் பிரியங்கா காந்தி. இன்றும், நாளையும் வயநாட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் வந்தடைந்தார். பின்னர் நீலகிரியில் இருந்து வயநாடு தொகுதி சென்ற பிரியங்கா காந்தி அங்கு ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.

    இதனை தொடர்ந்து, சுல்தான்பத்தேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மீனங்காடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வயநாட்டு மக்களை நான் ஏமாற்ற மாட்டேன்; அவர்களுக்காக கடுமையாக உழைப்பேன். வேலையில்லா திண்டாட்டம், நீர் பிரச்சினை உள்ள பல்வேறு பிரச்சனைக்கள் உள்ளன. தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் வயநாட்டு மக்களுடனான எனது தொடர்பு முறிந்துபோகாது.

    பெண்கள், விவசாயிகள், பழங்குடியினரின் தேவைகளை புரிந்து கொள்ள விரும்புகிறேன். தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களை சந்தித்து அவர்களுடன் பேசி, தேவைகளை புரிந்து திட்டங்களை உருவாக்குவேன் என்று தெரிவித்தார்.

    மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது பல்வேறு மக்களோடு நான் பேசினேன். அவர்களில் ஒருவர் ராணுவ வீரர். அவரது வீட்டுக்கு சென்று அவருடன் பேசினேன். அவர் என்னிடம் ஒரு ஜெபமாலையை கொடுத்தார். அதனை நான் எனது அம்மாவிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது எனது கடந்த கால சம்பவம் ஒன்றை நினைவுபடுத்தியது.

    அதனை நான் பொதுவெளியில் பகிர்ந்தது கிடையாது. ஆனால் இப்போது அது பொருத்தமாக இருப்பதால் அதை பகிர்கிறேன். எனக்கு 19 வயது இருக்கும். என் தந்தை இறந்து 6-7 மாதங்களுக்குப் பிறகு, அன்னை தெரசா, என் அம்மாவைச் சந்திக்க எங்கள் வீட்டிற்கு வந்தார்.

    காய்ச்சல் காரணமாக நான் படுக்கை அறையிலேயே இருந்தேன். என்னைப் பார்க்க அன்னை தெரசா எனது அறைக்கே வந்தார். என் தலையில் கை வைத்து ஆசீர்வதித்து ஒரு ஜபமாலையை கொடுத்தார். அப்பா இறந்த சோகத்தாலும், காய்ச்சல் காரணமாகவும் சோர்வுடன் இருந்த என்னை பார்த்து, நீ என்னோடு சேர்ந்து சேவை செய்ய வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    5-6 வருடங்கள் கழித்து டெல்லியில் உள்ள அன்னை தெரசா சேவை இல்லத்தில் பணிபுரிந்தேன்.குழந்தைகளுக்கு ஆங்கிலம், இந்தி சொல்லிக் கொடுப்பேன். சுத்தம் செய்வது, சமைப்பது, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது என பல்வேறு பணிகளைச் செய்தேன். அப்போதுதான் அவர்களின் துயரம், வலி ஆகியவற்றை நான் புரிந்து கொள்ளத் தொடங்கினேன்.

    பாதிக்கப்படும் மக்களுக்கு எவ்வாறு நாம் ஒன்றாக சேர்ந்து உதவ முடியும் என்பதும் புரிந்தது. சமூகமாக சேர்ந்து எப்படி உதவ முடியும் என்பதை கற்றுக்கொண்டேன். வயநாடு நிலக்காரிவின் போது எனது சகோதரர் ராகுல் காந்தியுடன் இங்கு வந்து மக்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் சமூகமாக இனணந்து உதவி செய்வதை பார்த்து அதன்மூலம் நிறைய கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×