என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து உங்களுக்கு டெம்போவில் அனுப்பியது யார்? - ராகுல்காந்தி
- வினோத் தாவ்டே ஓட்டல் அறைகளில் இருந்து 9.93 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
- வினோத் தாவ்டே பண பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜகவின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரசின் மகா விகாஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், தேர்தல் பிரசாரம் நேற்றோடு முடிவடைந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே பண பட்டுவாடா செய்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் ஓட்டலில் வாக்காளர்களை கவருவதற்காக வினோத் தாவ்டே ரூ.5 கோடி பணப்பட்டுவாடா செய்ததாக பகுஜன் விகாஸ் அகாடி தலைவர் ஹிதேந்திர தாக்கூர் குற்றம் சாட்டினார்.
வினோத் தாவ்டே ஓட்டல் அறைகளில் இருந்து 9.93 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாருக்கெல்லாம் பணத்தை பிரித்து தர வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய டைரியும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, வினோத் தாவ்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே மறுத்துள்ளார்.
இதனிடையே பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே பண பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, "ரூ.5 கோடி பணம் எங்கிருந்து வந்தது?. பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து உங்களுக்கு டெம்போவில் அனுப்பியது யார்?" என்று பதிவிட்டுள்ளார்.
मोदी जी, यह 5 करोड़ किसके SAFE से निकला है? जनता का पैसा लूटकर आपको किसने Tempo में भेजा? https://t.co/Dl1CzndVvl
— Rahul Gandhi (@RahulGandhi) November 19, 2024