search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது  எப்படி?.. சாட்டிலைட்  புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ
    X

    வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி?.. சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ

    • அரபிக் கடல் சூடேற்றம் இந்த கனமழை மற்றும் அதனைதொடர்ந்த நிலச்சரிவுவுக்கான காரணமாக சூழலியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்
    • ஐதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர்(NRSC) தளத்தில் இருந்து சாட்டிலைட்டைகள் அனுப்பப்ட்டன

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ந்தேதி கனமழை பெய்தது. மேக வெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டித் தீர்த்ததால் வயநாடு மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    தேசிய பேரிடர் மீட்புப்படை,தீயணைப்புப் படை வனத்துறை, காவல்துறை, தன்னார்வலர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணியில் அயராது ஈடுபட்டு வருகின்றனர். தோண்டத் தோண்ட சடலங்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அரபிக் கடல் சூடேற்றம் என பல்வேறு காரணிகள் இந்த கனமழை மற்றும் அதனைதொடர்ந்த நிலச்சரிவுக்கான காரணமாக சூழலியல் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.

    நிலச்சரிவில் மக்கள் சிக்கித் தவிக்கும் காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி மனதை ரணமாக்கி வரும் நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ, வயநாடு பகுதிகளில் முந்தைய காலங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளையும் தற்போதய நில்சசரிவையும் ஒப்பிடும் சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

    இஸ்ரோ தகவலின்படி, மண் சரிவு ஆரம்பப் புள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் பயணித்து முடிந்திருக்கிறது என்றும் ஒட்டுமொத்தமாக 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த பாதிப்புகளை இஸ்ரோவின் ஐதராபாத் தளமான நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர்(NRSC) தளத்தில் இருந்து நவீன கார்டோசாட்-3 ஆப்டிகல் சாட்டிலைட் மற்றும் மேகங்களின் ஊடாக தெளிவாக பார்க்கக்கூடிய RISAT சாட்டிலைட்களை வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு கடந்த ஜூலை 31 ஆம் தேதி அனுப்பி, அங்கு எடுத்த படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் NRSC அறிக்கைபடி, சூரல்மலை பகுதிகளில் பெய்த அதீத மழையே அதிகப்படியான நிலச்சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிகிறது.

    Next Story
    ×